பெதெஸ்தா எனப்பட்ட ஒரு குளம் THE POOL OF BETHESDA 50-08-11 CLEVELAND OHIO U.S.A மாலை வணக்கம். சகோதரர் பாக்ஸ்டர் (Baxter) உங்களுக்கு நன்றி. 1. நான் சீக்கிரமாக ஒரு வேத வாக்கியத்தை வாசித்துவிட்டு, நேராக ஜெபவரிசைக்கு செல்ல விரும்புகிறேன். பரிசுத்த யோவான் 5-ம் அதிகாரம் இந்த வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன். யோவான்: 5:1-9, 19 இவைகளுக்குப் பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. 19-வது வசனம், அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது: அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையே அன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். நாம் ஜெபம் செய்வோம். (ஒலி நாடாவில் காலி இடம் ஆசிரியர்) இதற்கு பிறகு இதைக் குறித்த எந்த ஒரு ஆவணங்களும் நம்மிடம் இல்லை. ஆனால், அது வியாதியாய் உள்ளவர்களுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் வழியை உண்டாக்கும்படியாக அந்த குளத்தின் தண்ணீரின் மேல் வருகிற ஒரு தூதனால் செய்யப்பட்ட ஒரு வழியாக இருக்கிறது. ஆகவே இன்றிரவும்கூட அந்த அதே தூதனானவர் மற்றொரு முறையில் மனிதன் மீது திரும்பி வந்து தண்ணீர் மேல் அசைவாடுவது பார்ப்பதற்க்கு எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது. இப்பொழுதும் பிதாவே, இந்த இரவில் இங்கிருக்கும் முடவர் ஊனமுற்றோர் மற்றும் வியாதியாய் உள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தாவியாகிய அந்த தண்ணீருக்குள் அடி எடுத்து வைத்து சுகமாக்கப்பட்டவர்களாக செல்ல வேண்டுமாய் ஜெபிக்கிறோம். இதை அருள்வீராக பிதாவே, அவர்கள் எப்படிப்பட்ட வியாதி உடையவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் சுகத்தை பெற்றுக் கொள்ளட்டும். இது குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் என்று இல்லாமல், விரும்புகின்ற எவரும் வந்து ஜீவ தண்ணீரை இலவசமாக பருகும்படியாக இருப்பதற்காகவும் இந்த இரவில் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் பிதாவே இதற்காக நன்றி கூறுகிறோம். இன்றிரவு வியாதியுள்ளவர்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவி செய்வீராக. 2. எதிராளியின் தந்திரங்களுக்கு எதிராக எங்களை பாதுகாத்து எங்கள் அருகில் இருந்து எங்களை ஆசீர்வதிப்பிராக. ஒரு மகத்தான நாளில் நாங்கள் வாழ்ந்து கெண்டு இருக்கிறோம். ஒரு பெரிய நாகரீகமானது பூமியிலிருந்து வெடித்து எழும்பிக் கொண்டு இருக்கிறது. நோவாவின் நாட்களில் நடந்ததைப் போல அப்படியே நடக்கும் என்ற நீர் கூறி இருக்கிறீர். இப்பொழுது அது தண்ணீருக்கு பதில் அக்கினியாக இருக்கும். இந்த பூமி ஆனது அணுசக்தியால் உலுக்கப்படும்... ஓ தேவனே எல்லா இடங்களிலும் இருக்கின்ற புருஷர்களும், ஸ்திரீகளும் நோவாவின் காலத்தில் சுவிசேஷம் பிரசங்கிக்கபட்டதைப் போல தேவனுடைய இந்த வருகையின் அவசரத்தை உணர்ந்து கொள்வார்களாக. உலகத்திற்கு கற்பனையாகவும் ஆனால் உள்ளே வரவிருப்பம் கொண்டு இருக்கிறவர்களுக்கு மகிமையானதாக வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கிறது. இப்பொழுதும் தேவனே நாங்கள் கிறிஸ்து என்கிற பாதுகாப்பான பேழைக்குள் வருகிறோம். தேவனால் மரணத்திலிருந்து உயிர்த் தெழுப்பப்பட்ட அந்த சரீரதத்தின் அங்கத்தினர்களாக ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருக்கிறோம். தேவனுடைய அந்த நியாயத் தீர்ப்புகள் அவருடைய இரத்தத்தில் கடந்து செல்லும். ஆகவே வரப்போகின்ற அந்த நாளில் நாம் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போலவே மாறியிருப்போம். பிதாவே தேவனிடத்தில் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளும் படியாக ஜனங்களை நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த அடையாளங்களும், அற்புதங்களும் இன்றிரவு ஜனங்களுக்கு முன்பாக முன்பாக செய்யப்படுவதாக. அனைத்தும் தேவனடைய குமாரன் மகிமைப்படும்படியாக செய்யப்படபட்டும். இதை அவருடைய நாமத்திற்க்காகவும், மகிமைக்காகவும் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 3. இன்றிரவு நேராக நாம் ஜெப வரிசைக்கு செல்வோம் என்று நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன். இன்றிரவு இங்கு வருவதற்கு முன்பு யாரோ ஒருவரால் என்னிடம் ஒரு சிறிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது. "சகோதரர் பிரன்காம் அவர்களே நீங்கள் ஏன் அந்த ஜனங்கள் அனைவரையும் குணப்படுத்தக் கூடாது-? என்று கூறினார். மேலும் இந்த நபர் இங்கே வந்திருப்பார் என்று நம்புகிறேன். நல்லது, நான் நானும் அப்படியே செய்வதற்கு விருப்பப்படுகிறேன். ஆனால் நான் ஒருவரையும் சுகப்படுத்த முடியாது. மேலும் நான் ஒவ்வொருவரையும் அந்த வழியில் அழைப்பதில்லை, சில நேரங்களில்..... எலியாவின் மேல் இருந்த சால்வை எலிசாவின் மேல் விழுந்ததைப் போல. இயேசுவின் மேல் இருந்த பரிசுத்த ஆவியானவர் இன்று அந்த முறையில் இந்த சபையின் மீது அசைவாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் இந்த வேத வாக்கியத்தை வாசிப்பேன் என்று நினைத்தேன். "நான் என் பிதாவினிடத்திற்கு போகிற படியினால் இவைகளை விட அதிகமான கிரியைகளை நீங்கள் செய்வீர்கள் ஆகவே அந்த சால்வையானது பெந்தேகொஸதே நாளன்று அந்த மகிமையை அவருடைய ஜனங்களுக்குள்ளாக மீண்டும் கொண்டு வந்தது தேவன் அவருடைய சபைக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய ஆவியானது அவருடைய ஜனங்களின் மேல் அசைவாடிக் கொண்டிருக்கிறது. 4. நாம் நம்பிக்கையற்ற சந்தேகங்கள் கொண்டிருக்கும் ஜனங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற ஒரு சந்ததியின் நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலாவதாக உணர்ந்து கொள்ள வேண்டும், அவர்கள் நம்ப மாட்டார்கள். 'மரித்தோரில் இருந்து ஒருவன் எழுந்து போனாலும் அவர்கள் நம்பமாட்டார்கள்" என்று இயேசு கூறினார் அந்த வார்த்தைகள் அவர்களிடம் நிறைவேறி விட்டது. சாத்தான் இப்பொழுது, தொண்ணூறு சதவீதம் மக்களை அவனுடைய மறுபக்கத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று அவன் உறுதி கொண்டிருக்கிறான் அது அப்படித் தான் என்று நமக்கு தெரியும். என்ன நடந்தாலும் இன்னுமாக அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அவர்கள் வித்தியாசமாக நம்புவதற்கு ஏதாவது ஒரு வழியை கண்டு பிடிக்க முயற்சி செய்வார்கள். நம்முடைய ஆண்டவரையும் கூட அவர்கள் பிசாசுகளின் தலைவன் என்றும் அசுத்த ஆவி பிடித்தவன் என்றும் அழைத்தார்கள். அப்படி என்றால் அவருடைய வீட்டாரை அவர்கள் எவ்வளவு அதிகமாக அப்படி அழைப்பார்கள். நாம் அதனுடன் எதிர்த்து போராட வேண்டும். ஆனால், சகோதரனே அது சிறிதும் கூட என்னுடைய விசுவாசத்தை அசைக்க போவதில்லை. அது அவரிடத்தில் நான் கொண்டிருக்கும் விசுவாசத்தை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. 'கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் வாழ மனதாய் இருக்கிற யாவரும் துன்புப்படுவார்கள்" மேலும் அந்த இரகசியமானது வார்த்தை கற்பிக்கப் பட்டிப்பதைப் போலவே எனக்கு எளிய முறையில் இருக்கிறது. அதை புருஷர்களும், ஸ்திரீகளும் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் "நீங்கள் காதார கேட்டு உணராமலும் கண்ணாரக் கண்டு அறியாமலும் இருங்கள் " என்று ஏசாயா கூறியிருக்கிறான். 5. இயேசு கிறிஸ்து அந்த பெதஸ்தா குளத்திற்கு வந்தபோது அவருக்குள் இரக்க உணர்வுகள் கொண்டவராக, துயரம் கொண்ட ஒரு மனிதனைப் போல, பழகினார். மேலும் அவர் அந்த ஜனங்களை நேசித்தார். அந்த குளத்திற்கு அவர் வந்த போது ஏறக்குறைய "திரளான கூட்டம்" என்று வேதாகமம் சொல்கின்றது. பத்தாயிரம் பேர்களுக்கு குறையாமல் இருக்கும் என்று நான் கூறுகிறேன். ஒரு இடத்தில் ஐம்பதாயிரம் பேர் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்தேன். குறைந்தபட்சம் பத்தாயிரம் பேர்களுக்கு குறையாமல் முடவர், குருடர், ஊனமுற்றோர், நலிந்த தேகம் உடையவர்கள் இப்படி பல வகையான நிலையில் ஜனங்கள் அங்கே படுத்துக் கொண்டிருந்தனர். ஆகவே இங்கே தானே மனுஷ குமாரனாகிய இயேசு வந்தார். நல்லது, பூமியின் மீது அவர் தேவனாக இருந்தார். மாம்சசரீரத்தில் தேவனாக இருந்தார். ''அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" ''உலகத்திற்கு தேவன் கிறிஸ்துவுக்குள் தம்மை ஒப்புரவாகிக் கொண்டார்'' என்று வேதம் சொல்கிறது. அந்த ஒரு வழியில் மட்டுமே நம்மை அறிந்து கொள்ளும்படி அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் மனித இனத்தின் மரணங்களின் வேதனை களையும், சோதனைகளையும் எல்லாவற்றையும் அனுபவித்தார். மேலும் அனுபவித்தார். மேலும் பிதாவினுடைய தன்மைகள் அனைத்தையும் அவருக்குள் கொண்டிருந்தார். 6. ஆகவே அவர் அந்த குளத்தின் அருகே நடந்து சென்று குருடர், சப்பாணி, வளைந்த கால்கள் கொண்டவர்கள் பிசாசினால் கட்டப்பட்டவர்களாக இருந்து கொண்டிருந்ததை பார்த்தார். அந்த தூதன் வானத்திலிருந்து வந்து தண்ணீரை கலக்குவதற்காக அவர்கள் பல வருடங்களாக படுத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்திருக்கலாம். கலங்கிய தண்ணீர் என்பது தண்ணீரின் சிதறல் ஆகும். ஏரியின் அருகே வசிக்கும் ஜனங்களாகிய உங்களுக்கு அதை பற்றி தெரிந்திருக்கும் கலங்குகிற தண்ணீர். ஜனங்களில் சிலர் அதை நம்புவது கிடையாது. அது வெறுமனே காற்றானது மோதி ஒரு குறிப்பிட்ட விசை அதன் மீது மோதுவதால் அப்படி ஏற்படுவதாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் என்ன நினைத்து கூறினார்களோஅப்படியாகவே அது அவர்களுக்கு இருந்தது. ஆனால் அவர்களில் யார் அதை கர்த்தருடைய தூதன் என்று விசுவாசித்தார்களோ, அப்படியே அது கர்த்தருடைய தூதனாக இருந்து அவர்களுக்கு சுகத்தை அளித்தது இன்றிரவும் கூட அது அப்படியாகவே இருக்கிறது. 7. ஆனால் கவனியுங்கள். இயேசு அங்கே கடந்து சென்ற போது, திரளான கூட்டத்தை அவர் பார்த்தார். தேவனுடைய வல்லமை அனைத்தும் அவருக்குள் இருந்ததை போல் தெரியவில்லையா. அங்கிருந்த ஒவ்வொரு நபரையும் அவரால் சுகப்படுத்தியிருக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்றிரவில் நீங்களும் அப்படி விசுவாசிக்கிறீர்கள் இல்லையா-? அதை அவர் செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆகவே அவர் தேவனிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா-? ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கரிசியை உங்கள் நடுவில் இருந்து எழுப்புவார்" என்று மோசே கூறவில்லையா-? அவர் அந்த தீர்க்கதரிசியாக இல்லையா-? பிறகு அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். அவர்களிடம் எதையாவது பேசிக் கெண்டு எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவர் ஒரு மனிதனை குணப்படுத்தினார், ஒரு ஊனமுற்ற நபரை அல்ல, முப்பத்தெட்டு வருடங்களாக பலவீனமான நிலையில் இருந்த ஒரு மனிதனை அவர் குணப்படுத்தி விட்டு அப்பால் நடந்து சென்று விட்டார். மேலும் அங்கு படுத்துக்கெண்டிருந்த குருடர், முடவர், நலிந்த அந்த திரளான ஜனக்கூட்டத்தை கடந்து அப்படியே அப்புறமாக நடந்து சென்று விட்டார். அது உண்மை தானே-? இதன் பேரில் அவரிடம் கேள்வி கேட்ட போது. "மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆனால் பிதா செய்கிறதாக குமாரன் காண்கிறது எதுவோ அதையே அன்றி வேறென்றையும் தாமாக செய்ய மாட்டார் அவர் எவைகளை செய்கிறாரோ அவைகளை குமாரனும் அந்தப்படியே செய்கிறார்'" அது சரிதானே-? பிதா அவருக்கு காண்பிக்கிறது எதுவோ அதை தவிர குமாரன் தாமாக எதையும் செய்ய மாட்டார். நல்லது எப்படிப்பட்ட ஒரு சிறிய காரியமாக இருந்தாலும் பிதா அவருக்கு காண்பிக்கிறவைகளை தவிர வேலைக்காரனால் வேறு எதை செய்ய முடியும்-? 8. என்னுடைய அருமை சகோதர, சகோதரியே, என்னால் முடியுமானால் இந்த கட்டிடத்தில் உள்ள முழு குழுவும்... சுகத்தைப் பெற்றுக்கொள்ளாத நபர் ஒருவர் கூட இல்லாதவாறு கர்த்தருடைய மகிமைக்காக இந்த கட்டிடத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே செல்வதைக் காண வேண்டும் என்று என் இதயமானது விரும்புகிறதை தேவன் அறிவார். பார்வையாளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இன்றிரவு சுகம் பெறுவதைக் காண, என்னுடைய முதுகில் அழுக்குடன் ஆறு மாதங்களாக எந்த ஒரு அசைவும் இன்றி படுத்திருக்க வேண்டும் என்றிருந்தால் நான் கர்த்தருடைய மகிமைக்காவும் உங்கள் நிமித்தமாகவும் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன். மிக நீண்ட காலமாக வியாதியாய் இருக்கும் உங்களில் அநேகர் தேவன் இல்லாமல் மரித்து விடுவீர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று முதலாவதாக தேவன் என்னிடம் கூறாமல் மனிதனாக இருந்து கொண்டு நான் எப்படி அதைச் செய்ய முடியும்-? அதற்கு புறம்பாக நான் எதையாவது செய்வேனானால் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன். மேலும் அது அப்படி இருக்க முடியாது, ஆகவே அது ஒரு போதும் அப்படி இருக்க முடியாது. 9. மேடையில் இருக்கும் போது நீங்கள் கவனிப்பீர்களானால் நான் எவ்வளவாக அதை நெருக்கமாக ஆராய்கிறேன். ஒரு வார்த்தை என்னுடையதாக இருக்குமானால் தவறாக இருக்கும். அது தேவனுடையதாக இருக்கும் என்றால் அது பரிபூரணமாக இருக்கத் தான் வேண்டும். ஆகவே தான் அவரே அதை செய்யும் படியாக விட்டு விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் அதை கவனித்து அந்த வெளிப்படுத்துதல்களை பார்க்கின்றீர்கள். குறிப்பிட்ட சில காரியங்களை நான் செய்யும்படியாக அதை காண்பிக்க வேண்டுமென்று சில நேரங்களில் கேட்பேன், அதையே நான் செய்வேன். ஆனால் குமாரன் வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்'' என்று இயேசு கூறியுள்ளார். "பிதா செய்வதாக காண்பது எதுவோ அந்த காரியங்களே அன்றி வேறெதையும் செய்ய மாட்டார்" லாசருடைய அந்த உயிர்தொழுதலை நீங்கள் கவனித்து இருக்கிறீர்கள் அல்லவா-? அவருடைய நாட்களில் இறந்து போன மக்களை கவனியுங்கள். அவர்களில் யவீருவின் மகள், அந்த (நாயீன் ஊர்) விதவையின் மகள், மற்றும் லாசரு ஆக மூன்று பேர் உயிரோடு எழுப்பப்பட்டதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளது. தேவனால் அபிஷேகிக்கப்பட்ட அவருடைய ஆளுகை நாட்கள் எருசேலேமில் மூன்றரை வருடங்களாக இருந்தது. அவருடைய சிநேகிதன் லாசரு மரித்தபோது அவர் என்ன செய்தார்..... ''லாசரு நித்திரை அடைந்திருக்கிறான் உங்கள் நிமித்தம் நான் அங்கு இராததினால் சந்தோஷப்படுகிறேன் ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்று கூறினார். என்ன நடக்கப் போகிறதென்று பிதாவானவர் ஏற்கனவே அவருக்கு காண்பித்திருந்ததை அவர் அறிந்திருந்தார். கல்லறையில் நின்று அவர் ஜெபம் பண்ணியதை கவனியுங்கள். "நீர் எப்பொழும் எனக்கு செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன் ஆனாலும் நீர் என்னை அனுப்பினதை சூழ்ந்து இருக்கும் ஜனங்கள் விசுவசிக்கும்படியாக இதை கேட்கிறேன்" அது சரி தானே. ஆகவே நண்பர்களே இன்றிரவும் அது உங்கள் சகோதரனுடையது அல்ல... எனக்கு அருமையானவர்களே பிதா எனக்கு காண்பிக்கா விட்டால் நான் எதையும் செய்ய முடியாது. அவர் என்ன கூறினாரோ அதையே நான் பேசுவேன். ஆனால் அவர் எதையும் கூறவில்லையென்றால் நான் அங்கே அமைதியாக இருப்பேன் ஏனென்றால் தேவன் பெயரில் நம்பிக்கை வைக்கிற ஒரு ஊழியக்காரனாக இருக்கிறேன். மேலும் நான் பேசுகிற காரியங்கள் சத்தியமாக இருக்கிறது. தேவனே அதற்கு சாட்சி கொடுக்கிறார். ஆகவே நான் இங்கே வேடிக்கை காட்டும் ஒருவனாக இருந்து கொண்டிருக்கவில்லை. தேவன் சொல்வதைச் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு ஊழியக்காரனாகவும் இருந்து கொண்டு இருக்கிறேன். 10. ஒரு சமயம் கண்களை சுற்றிலும் துணியால் கட்டப்பட்டவராக இருந்தார். அதே மாதிரியாக சில ஜனங்கள் அவரை முகத்தில் அடித்து "இப்பொழுது நீ ஒரு தீர்க்கதரிசி என்றால் உன்னை அடித்தது யார்-? என்று எங்களுக்கு சொல்" என்றனர். அவரோ ஒரு போதும் வாய் திறக்கவில்லை அல்லது ஒரு வார்த்தையும் கூட பேசவில்லை. 'ஞானமானது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக் கொள்ளப்படும்" அது சரிதான். ஜெபத்தில் இருங்கள், உண்மையாக இருங்கள் விசுவாசத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். இந்த காரியங்களை எல்லாம் தேவன் நிறைவேற்றுவார். ஆகவே நீங்கள் உங்கள் இருதயத்தில் ஆவிக்குரிய பக்தி உடையவர்களாக வர வேண்டும் அல்லது தேவன் உங்களுக்கு எதையும் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவாக தாழ்மையை பெற்றிருந்து, எவ்வளவு குறைவாக உலக காரியங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கறீர்கள் என்றால் நீங்கள் தேவனுடைய பார்வையில் சிறப்பாக இருந்து கொண்டு இருக்கிறீர்கள். எப்பொழுதாகிலும் நான் கொண்டிருக்கும் ஒரு மகத்தான வெற்றியானது, படிக்கவோ எழுதவோ தெரியாத அரிதான மக்களின் மத்தியில் தான். அதற்காக நான் அறியாமை அல்லது தவறானவைகளுக்கு ஆதரவு தர முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு இதுவரை இருந்ததில் மிகப் பெரிய தடை இந்த நவீன நாட்களின் கல்வியாகத் தான் இருந்தது. அது முற்றிலும் சரியாக இருக்கிறது. இந்த ஊழியத்தில் கூட வேதாகமத்திற்கு வெளியில் இருந்து அந்த இரத்தம், அந்த அற்புதங்களின் நாட்கள் அந்த வல்லமை இப்படி ஒவ்வொன்றிக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவை எல்லாம் புறம்பாக விவரித்து சொல்லப்படுகிறது. ஆகவே அருமை நண்பர்களே உலக ஞானமானது உலகத்தை அழித்துப் போடுகிற ஒரு காரியமாக இருந்து கொண்டிருப்பதை நீங்கள் காணமுடிவில்லையா-? ஏதேன் தோட்டத்தில் அங்கே இரண்டு வகையான விருட்சங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று ஜீவ விருட்சமாக இருந்தது. மனிதன் அந்த மரத்திலிருந்து புசித்து என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருந்தான். மேலும் அந்த மற்றொரு விருட்சம் ஞானத்தை கொண்ட விருட்சமாக இருந்தது, மரணத்தைக் கொண்ட விருட்சமாக, வியாதியைக் கொண்ட விருட்சமாக இருந்தது. 11. மனிதன் அங்கும் இங்குமாக ஓடி அறிவு பெருகிப்போய் துப்பாக்கி துகள்கள், மின்சார ஒளி, பூமியிலிருந்த வாயுக்கள் இவைகளை எடுத்து இவற்றுடன் தன்னை தானே அழித்துக் கொண்டிருக்கிறான். மேலும் இப்பொழுது அவர்கள் ஒரு ஹைட்ரஜன் வெடி குண்டை (Hydregen Bomp) அவர்களுக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் எனக்கு தெரியாது. தானியங்கி வாகனங்கள்.... ஒவ்வொரு மனிதனும்... தேவன் எந்த ஒன்றையும் அழித்து கொண்டிருக்கவில்லை. உலக ஞானத்தைக் கொண்டு மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறான். அந்த முரண்பாடானது எப்பொழுதாவது உலகத்திற்குள் வந்திருக்குமானால் அது எளிமையாக தேவனிடத்தில் விசுவாசம் கொள்வதற்குப் பதிலாக சிலர் உலக ஞானத்தை தேடிக் கொண்டு இருந்ததனால் தான் இதைக் கவனியுங்கள். "டாக்டர் இன்னார்... இன்னார் இதை விசுவாசிப்பதில்லை" என்று நீங்கள் கூறலாம் அது தேவனுடைய வார்த்தையை ஒரு இம்மியும்கூட எந்த அளவையும் மாற்றி விடாது நீங்கள் ஞானத்தால் பாதுகாக்கப்பட்டு இருக்கவில்லை. நீங்கள் உங்களுடைய கல்வியினால் பாதுகாக்கப்பட்டு இருக்கவில்லை, இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறீர்கள் உங்களுடைய கல்வியைப் பற்றினதான அறிவை மறந்து விடுங்கள். உங்களுடைய நெறிமுறைகளில் எளிமை உள்ளவர்களாக இருங்கள். 12. நாம் நமது தலைகளை தாழ்த்துவோம். பரலோக பிதாவே, சத்துரு வெள்ளம் போல் வந்து கொண்டிருக்கிற இந்த நாளில் வாழ்ந்து கொணடிருக்கிறதை காணும் போது எங்கள் இருதயங்கள் சந்தோஷத்தில் நிறைந்திருக்கிறது. ஏனென்றால் "நான் அதற்கு எதிராக கொடியை உயர்த்துவேன்" என்று நீர் கூறியிருக்கறீர். இந்த இரவில் இங்கே இந்த கூடாரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருக்கிற புருஷர்கள் மேலும் ஸ்தீரிகள் மேலும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டு அவர்களுடைய இருதயங்களை உம்முடைய நன்மைகளால் நிறைத்து தேவனிடத்தில் விசுவாசம் கொள்வதற்காக அவர்களுடைய ஜீவியத்தை தயார் செய்யட்டும். இப்பொழுதும் தேவனே இன்றிரவில் உமது பிள்ளைகளின் மத்தியில் நீர் வல்லமையுடன் வந்து உம்மைத் தானே அறிந்து கொள்ளுபடியாக செய்ய வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். மேலும் பிதாவே, நான் ஜனங்களுக்கு இன்றிரவு சாட்சி அளித்ததைப் போல உம்முடைய நேச குமாரனும் கூட முதலில் பிதாவானவர் அவருக்கு எதையும் முன்பே காண்பிக்காமல் எந்த ஒன்றையும் செய்திருக்கவோ, அல்லது எந்த ஒரு வார்த்தையையும் பேசியிருக்க முடியாது. அது உண்மையாக இருக்கிறது என்று அவர் சாட்சி அளித்துள்ளார். ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு பிறகும் ஆரம்பத்தில் இருந்ததை போல அந்த காரியங்கள் அதே வழியில் இருந்து. சபையில் அவருடைய ஆவியானது ஜீவித்துக் கொண்டிருக்கிறது. விற்றுப் போட்ட அந்த தீர்க்கத்தரிசியாகிய பிலேயேம் இன்னுமாக அங்கே அந்த மலையின் மீது நின்று கொண்டிருப்பதை குறித்து நினைத்து பார்க்கிறோம் தேவன் முதலில் அவர்களுடைய வாயில் வார்த்தையை போடாமல் எந்த ஒரு தீர்க்கதரிசியும் எந்த ஒரு வார்த்தையையும் எப்படி கூற முடியும்-? உண்மையாகவே பிதாவே, எல்லா துதிகளும் மகிமையும் எல்லா செயல்களும் உம்மை நோக்கியே செல்கிறது. 13. ஆகவே இன்றிரவிலும் கூட சர்வ வல்லமையுள்ள உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் வருகிறோம். அவர் கல்வாரியில் வேதனைபட்டு இலவசமாக அங்கே அவருடைய இரத்தம் சிந்தப்பட்டு மரணம், பாவம், துயரம், வியாதிகள் எல்லாவற்றின் மீதும் ஜெயம் கொள்ளும்படியாக அந்த வாக்குதத்தமானது 40 அல்லது 50 நாட்களுக்கு பின்பு பரிசுத்த ஆவியின் வல்லமையோடு சபையின் கரங்களுக்குள்ளாக வந்திருக்கிறது. ஆகவே ''நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால் நான் செய்த கிரியைகளை விட அதிகமான கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்' ஆகவே இன்றிரவு எலியாவை நினைத்து பார்க்கிறேன். அந்த சால்வையானது எலிசாவின் மீது விழுந்த பின்பு எலியாவின் சால்வையை எலிசா எடுத்துக் கொண்டு, அந்த இரட்டிப்பானதை பெற்றுக் கொண்டு கீழே அந்த யோர்தான் நதியை நோக்கி நடந்து சென்று எலியாவின் தேவன் எங்கே-? என்று கூச்சலிட்டு அடித்தான். பிதாவே, பரிசுத்த ஆவியாகிய அந்த சால்வையானது சபையின் மேல் விழுந்த பிறகு "இயேசுவின் மேல் இருந்த அந்த தேவன் எங்கே-? என்று எப்படி சபையானது கூறாமல் இருக்க முடியும்-? என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஓ தேவனே இன்றிரவு அருள்வீராக. அந்த மனிதர்கள் அவருடைய நீதியை தங்கள் மேல் சுற்றப்பட்டவர்களாக முன்னேறிச், சென்று சவால்விட்டுக் கொண்டு சிலுவையை சுமந்து கொண்டிருக்கும் யுத்த வீரர்களைப் போல தேவனிடத்தில் அன்பு கூறும் புருஷர்களும், ஸ்திரீகளும் தேவனுடைய இராஜ்யத்தின் நிமித்தமாக தங்களை பலியாக ஒப்புக் கொடுக்க விருப்பம் கொள்ளட்டும். மேலும் தேவனே இன்றிரவு உம்முடைய வரங்கள், உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரன் மீது கீழே வருவதாக எல்லா இரவுகளிலும் அது இருப்பதாக அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டு எதிராளிகளின் வாயை மூடச் செய்வதாக தேவனுடைய ஜனங்களுக்கு அது மகிமையைக் கொண்டு வருவதாக, பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொருவருடைய இதயத்தையும் பிடித்துக் கொள்வாராக அவர்களுடைய வாழ்க்கை நிரப்பப்படுவதாக, அவர்களுடைய சரீரங்கள் சொஸ்தம் அடைவதாக தேவனுடைய குமாரானாகிய இயேசுவின் நாமத்தினால் பகைவர்களுக்கு சவால் விடுத்தவர்களாக இப்போது முன்னேறிச் செல்கிறோம். ஆமென். 14. இப்பொழுது ஒவ்வொருவரும் முடிந்த வரை பயபக்தியுடன் இருங்கள். நாம் சரியாக நேராக ஆராதனைக்குள் சென்று கொண்டிருக்கிறோம். கர்த்தருக்கு முன்பாக எப்படி இருக்க வேண்டும் என்று நான் அறிந்துள்ளபடி எல்லோரும் பயபக்தியாக இருக்க கேட்டுக் கொள்கிறேன். ஆகவே நாம் சீக்கிரமாக இப்பொழுது துவங்குவோம், ஆகவே இன்றிரவு ஒரு நல்ல நீண்ட நேரத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த குழுவுக்கு ஜெபித்த பிறகு நாம் அதிகமாக ஜெபம் பண்ண முடியும். ஆகவே நீங்கள் தொடர்ந்து விசுவாசத்தைக் காத்து கொள்வீர்களானால் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒரு ஜெப அட்டையும் கூட இல்லாமல் அப்படி இருக்க முடியும். இரவில் நாம் இந்த கட்டிடத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக உங்கள் ஒவ்வொருவருடைய விசுவாசமானது கட்டப்பட்டதாக ஒரு இடத்திற்கு கொண்டு வரப்படுமானால் அங்கே தான் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் வைத்திருக்கும் அந்த அதிகமான உங்கள் விசுவாசமானது நாம் சீக்கிரமே அந்த வரிசையின் வழியாகச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் அல்லவா-? 15. ஆனால் இப்பொதும் கூட இங்கே என்ன நடக்கிறது. நாம் அவரை அழைக்கும் எல்லா நேரங்களிலும் எப்பொழுதும் அவர் வருகிறார். இப்பொழுது ஜனங்களாகிய நீங்கள்.... சரி....அம்மா உங்களுடைய எண் அழைக்கப்பட்டுள்ளது. அவளுடையதை பெற்றுக் கொள்ள அங்கே பின்னால் இருந்து அவர்கள் வருகிறார்கள், வெளியில் நீங்கள் எங்கே இருந்தாலும் அருமையான, எளிமையாக காணக்கூடாத காரியங்கள் இங்கே இருக்கிறது. ஆனால் மிகவும் பயபக்தியுடன் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புவது எல்லாம் அது தான். ஆகவே, சுற்றிலும் இருப்பவர்கள் அமைதியாக இருந்து சுகவீனம் கொண்டவர்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்றால் நான் உங்களைப் பாராட்டுவேன். மேலும் வியாதியுற்றவர்களும், பாதிக்கப் பட்டவர்களும், அதைப் பாராட்டுவார்கள் என்பதை நான் அறிவேன். அங்கே அது உங்களுடைய சகோதரியாகவோ, மனைவியாகவோ அல்லது தாயாராகவோ, தந்தையாகவோ இருப்பார்கள் என்றால். இங்கே இன்றிரவு புற்று நோயுடன் பின்னால் அமர்ந்து இருப்பார்களானால் அங்கே அதை குணப்படுத்த தேவனை தவிர வேறொருவராலும் எந்த ஒன்றையும் சுகப்படுத்த முடியாது என்பது தெரியும். ஒ.... நான்..... அதை நினைத்து பாருங்கள் இப்பொழுதும் அது உங்களுடைய தாயாராக இருந்தால் எப்படி இருக்கும்-? "இனி மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அதை குறித்து எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு சிறிது நம்பிக்கை இருக்கிறது. இந்த கூட்டத்தில் யாராவது ஒருவர் தொந்தரவு செய்வார்கள் என்றால் என்ன செய்வது-? நீங்கள் அதைக் குறித்து மிகவும் மோசமாக உணர மாட்டீர்களா-? நண்பர்களே-? நான் மூடநம்பிக்கை கொண்ட ஒரு நபர் அல்ல', ஆனால் அங்கே கூட்டங்களில் ஒரு மகத்தான மனிதர் இருந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். தேவன் உங்கள் விசுவாசத்தையும் மரியாதையையும் நிச்சயமாகவே கௌரவிக்கிறார். கட்டிடத்தின் உள்ளே இருந்து இப்பொழுது அதிகமான விசுவாசம் வந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஊழியக்காரர்களில் சிலர் நான் ஜெபவரிசை வரையில் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்கள் அவர்கள் எங்கிருந்து தொடங்கப் போகிறார்கள். அதன் பிறகு ஒரு கணம் இதை நான் விளக்கி கூறட்டும். நான் வெளியில் அமர்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது-? நானாக இருந்தால் கூட என்ன-? வியாதியஸ்தர் அல்லது வேதனையோடு இருப்பவர்களுக்காக நான் நின்று கொண்டிருந்தேன் அது என்னுடைய தாயாக இருக்கும் என்றால்-? நான் குருடனாக இருந்திருந்தால் ஒ. நான் என்ன செய்திருக்க முடியும்-? அவர்களுக்கு செய்வதற்கு எனக்கு விருப்பம் உள்ளது. இப்பொழுது தேவன் எனக்கு இரக்கம் காண்பித்ததைப் போல நான் இரக்கம் காட்ட முடியும். ஆனால் நண்பர்களே அது நானல்ல, நான் எதைச் விரும்புகிறேனோ அதைச் செய்யும்படியாக அது எனக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. நான் கேட்பதால் இது எனக்குக் கொடுக்கப்படவில்லை. இப்பொழுது ஏற்கனவே உங்களுடைய விசுவாசம் அழகாக இருந்து கொண்டிருக்கிறது . 16. அங்கே ஏற்கனவே ஒரு நபர் குணமாக்கப்பட்டுவிட்டார். இப்பொழுது அதுதான் உண்மை அங்கே இரண்டு பேர் குணமாக்கப்பட்டிருக்கிறார்கள். அது உண்மை. நீங்கள் அதை பார்க்க விரும்புகிறீர்கள். அந்தப் பெண்மணியும், இங்கே மேலே அமர்ந்து கொண்டிருக்கிற அந்த வாலிப மனிதனும் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சிறிய பையனை மடியின் மேல் வைத்துக் கொண்டிருக்கிற சகோதரியும் கூட. அவர்கள் ஒன்றாக அங்கே கீழே சென்று விட்டனர். இதை நான் நம்புகிறேன் அது எல்லாமே முடிந்துவிட்டது. இப்பொழுது சந்தேகம் கொள்ளாமல் விசுவாசத்தை மட்டும் உடையவர்களாக இருங்கள். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை மற்றும் முழு இருதயத்தோடு உங்கள் இருதயங்களில் கொண்டிருங்கள் நம்முடைய தலைகளை ஜெப வார்த்தைக்காக நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். எங்கள் பரலோக பிதாவே எது சரி, எது தவறு என்று தெரியாமல் மரித்துக் கொண்டிருக்கிற மனிதர்களாக இருக்கிறோம். நாங்கள் மேலும் தேவனை துதித்து கொண்டு இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கே இருந்து எடுக்கப்பட்டோமோ அந்த புழுதியை நோக்கி எங்கள் தலைகளை வணங்கினவர்களாக இருக்கிறோம். சில நாட்களில் அங்கே திரும்பிச் செல்வோம். நாங்கள் இப்பொழுது அந்தகார சக்திகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். மேலும் சாத்தான் ஜனங்களை கண்டு பிடித்து மறுபக்கத்தில் உள்ள அவனுடைய வீட்டிற்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறான். ஆனால் தவறுக்கு எதிராகவும் தேவனுடைய வார்த்தைக்கு எதிரான சந்தேகம், அவிசுவாசத்திற்கு எதிராகவும், உண்மையான ஒரு யுத்தத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். ஒ.. பிதாவே, கர்த்தருடைய தூதர்கள் தாமே தங்களுடைய வெள்ளைக் கொடிகளை அசைத்து, அந்த சிலுவையின் பாதைகளை பரிசுத்த ஆவியானவர் தாமே உயர்த்துவாராக, இன்றிரவு அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்படுவதாக, எல்லா காரியங்களையும் உம்மிடம் தருகிறோம். அவைகளை விசுவாசிக்கிறோம். பிதாவே இப்பொழுது உம்முடைய வல்லமையானது இங்கே சுகபடுத்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுதும் கூட அதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்று இந்த அறையில் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். மேலும், ஏற்கனவே அதை செய்வதாக நீர் இங்கே வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். மேலும் இங்கு நீர் அசைவாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் அநேக காரியங்கள் செய்யப்படுவதாக இதை அருளும்... தேவனே. 17. சரி, தேவனிடத்தில் விசுவாசம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். நான் ஜெபிக்கும் போது முன்னால் வருவீர்களா-? இது வெறுமனே சில காரியங்களாக இருக்கிறது என்று எனக்கு தெரியும் நண்பர்களே இப்பொழுது பயபக்தியாய் இருங்கள். பெரும்பாலும் இது நோயாளிகளை முகத்துக்கு முகம் தொடர்பு கொள்வதாக இருக்கிறது மற்றும் மனிதனுடைய ஆத்துமாவை தொடர்பு கொள்வதாக இருந்து கொண்டிருக்கிறது அவ்வளவு தான். அதனால் தான் சில நேரங்களில் வெளியே நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆகவே இன்றிரவு போதும் என்று கூறிவிட்டேன். அது உங்கள் இஷ்டம். நான் ஜெபிக்க போய்கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான் எனக்கு தெரியும். சரி, சகோதரியே முன்னால் வாருங்கள் கொஞ்சம் உங்கள் கையை கொடுங்கள்... நீங்கள் சில சிறிய தவறான காரியங்களை உடையவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு வியாதி எதுவும் இல்லை, நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள். சில காரியங்களை கேட்டிருக்கிறீர்கள் அது நடக்காது. உங்களுக்கு மூட்டுவலி இருக்கிறது. இங்கே அதை என்னால் எடுத்துப்போட முடியாது. காரணம் அதனுடைய அமிலத்தன்மையானது உங்களுடைய இரத்தத்தில் இருக்கிறது. ஆனால் அது இங்கே மேலே வந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன். என்னை விசுவாசிக்கிறீர்களா சகோதரியே-? உலகில் மூட்டு வலிக்கு மருந்து இல்லை. மேலும் இந்த காரியத்தில் நம்பிக்கை இல்லாமல் உங்கள் பாதையில் நீங்கள் சென்று கொண்டு இருக்கிறீர்கள் ஆகவே இப்பொழுது உங்களுக்கு ஒரு வாய்ப்பும் இல்லை. ஆனால் நீங்கள் உறுதி உடையவர்களாக இருக்கிறீர்கள் பாருங்கள்-? தேவன் அவருடைய ஆளுகைக்குள் ஒரு ஆச்சரியப்படும் அடையாளத்துடன் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, நீங்கள் ஒரு நோயாளியாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னை விசுவாசித்தால் அன்றி உங்களிடமிருந்து அதை எடுத்துப் போட நான் தகுதியில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் உங்கள் தொல்லை என்ன என்று என்னால் கூறமுடியும் ஆகவே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். தேவனுக்கு புறம்பாக இந்த உலகில் எந்த ஒரு வழியுமே இல்லை என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். அது சரி தானே-? நல்லது, அது தேவன் உங்களுக்கு அவரையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா-? நான் உங்களுக்கு ஜெபம் செய்தால் இயேசு உங்களை நன்றாக குணமாக்குவார் என்பதை விசுவசிக்கிறீர்களா-? 18. பிதாவே, நீர் எந்த ஒரு சந்தேக நிழலுக்கும் அப்பால் இங்கே இருந்து கொண்டிருக்கிறீர் மேலும் இந்த ஜனங்களை சுகமாக்குவதற்கு நீர் இங்கே இருந்து கொண்டிருக்கிறீர். தேவனே செய்யப்பட்ட அந்த எல்லாக் காரியங்களும் எப்படி செய்யப்பட்டது என்பதை நான் அறிவேன், நான் சாட்சி அளித்துள்ளேன். ஒவ்வொரு இரவும் பின்னால் இருந்து கொண்டு சத்தியத்தை உரைத்தீர். கிறிஸ்துவே அந்த சத்தியமாக இருக்கிறார். நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம், தேவனே விசுவாசிக்கிறோம். அவர் தன்னுடைய குமாரனை பாவ சரீரத்தின் சாயலாக அனுப்பி, நம்மை மீட்டுக் கொண்டார் என்பதை விசுவாசிக்கிறோம். மேலும் இப்பொழுது அந்த இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டோம் என்பதை விசுவாசித்து பரலோகத்தின் முன்ருசி எப்படி இருக்கும் என்பதை பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கிறோம். மேலும் தெய்வீக சுகமளித்தல் வழியாக எங்களுடைய சரீரங்கள் மீட்கப்பட்டுள்ளதை விசுவாசிக்கிறோம் பிதாவே, ஊனமுற்ற இந்த ஸ்திரீயின் நரம்புதளர்ச்சி, வியாதி இந்த சாபங்களை நீக்கிப் போடும் படியாக நீர் இங்கு இருந்து கொண்டிக்கிறீர் அன்பான தேவனே, அவள் மீது இரக்கமாயிரும். சாத்தானே, தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் இந்த ஸ்திரீயை விட்டு அகன்று போ. இப்பொழுது, சகோதரியே, இந்த வழியைக் கவனியுங்கள், என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் அவருடைய ஊழியக்காரன் என்றும் எனக்கு கீழ்ப்படிவீர்களா-? சரி சற்று கடினமாக இருந்தாலும் உங்கள் கரங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும்படியாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அது நன்றாக இருக்கிறது. உங்கள் பாதத்தை இப்படியாக மேலும் கீழுமாக உயர்த்துங்கள் இப்பொழுது உங்களுக்கு எந்த ஒரு மூட்டுவலியும் இல்லை, அதிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறீர்கள். சகோதரியே நீங்கள் எப்பொழுதம் இருப்பதைப் போல இப்பொழுது வீட்டிற்குச் செல்ல முடியும், மேடையிலிருந்து விரைவாக நடந்து செல்லுங்கள். 'தேவனுக்கு துதி உண்டாவதாக' என்று கூறுவோமாக. 19. சரி சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள். அது உங்கள் கண்களில் இருந்து கொண்டு இருக்கிறது. உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அது சரியா-? சில நேரங்களில் உங்கள் கண்கள் முழுவதும் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அம்மா, உங்களிடம் வேறு சில மற்ற காரியங்களும் தவறாக இருந்து கொண்டிருக்கிறது. தேவன் தம்முடைய அன்பானவர்களை ஆசிர்வதிப்பாராக. தேவன் கூறுவதை மட்டுமே நான் உங்களிடம் கூறவதை தவிர எனக்கு உலகில் வேறு எந்த வழியும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். அது சரி தானே -? இப்பொழுது அவர் எனக்கு கொடுத்திருக்கின்ற அந்த ஒரு வரத்தை தவிர வேறு எந்த வழியும் இந்த உலகத்தில் இல்லை. அது அப்படித் தான் இருக்கிறது. ஆனால் உன்னை குணமாக்குவதற்கு தேவனுடைய வல்லமை இருக்கிறது. அதை சுகமாக்க என்னிடம் எந்த வழியும் இல்லை, உனக்கு ஜெபம் மட்டுமே நான் செய்ய முடியும். ஆனால் அவர் என்னிடம் கூறியது என்னவென்றால் "ஜனங்கள் மட்டும் உன்னை உத்தமமாக நம்பும்படி செய்வாய் என்றால்-என்றால் உன்னுடைய ஜெபங்களுக்கு முன்பாக எந்த ஒரு காரியமும் நிற்க முடியாது" எப்படி ஜீவனானது மரிக்கிறது பின்பு அது அப்பால் சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் விவரித்து கூறியதை கேட்டிருக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அது தெய்வீக சுகமளித்தலாக இருக்கிறது. ஆனால் இங்கே இயற்கைக்குமேம்பட்ட காரியங்கள் சுற்றிலும், எங்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தவர்களாக அருகில் நின்று கொண்டிருக்கிறீர்கள் அது சரி. ஆகவே தேவனிடத்தில் இருந்து அனுப்பப் பட்ட ஒரு வரமாக அது இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா-? எல்லாம் சரி. உங்கள் தலைகளை தாழ்த்துங்கள் (பார்வையாளர்கள் அனைவரும் ஜெபத்தில் தங்கள் தலைகளை தாழ்த்துகின்றனர்) 20. எங்கள் பரலோகப் பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கிறீர். ஒரு குருட்டுத்தன்மை கொண்ட ஆவியானது பலவீனப்படுத்தும் விதமாக எங்கள் சகோதரியின் மீது இருந்து கொண்டு அவர்களுடைய பார்வையை குருடாக்கி, அதன் பிறகு அவர்கள் கைத்தடியுடன் இருப்பதை பார்க்க வேண்டுமென்று முயற்சித்து கொண்டிருக்கிறான். யாரோ ஒருவருடைய தாயார் பார்வை இல்லாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், தேவனே அது உம்முடைய சித்தம் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் அது அப்படித்தான் இருக்க வேண்டும். வியாதிகளில் இருந்தும், பாவத்தில் இருந்தும் எங்களை மீட்டுக் கொள்ளும்படியாக நீர் எங்களுக்காக மரித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். உத்தமமாக நான் அதை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்தவனாக, என்னுடைய முழு இருதயத்துடன் நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். உம்முடைய மகிமைக்காக இந்த சகோதரியின் கண்களில் மீண்டும் பார்வை கிடைக்க செய்வீராக. தேவனே நீர் எனக்கு உதவி செய்ய வேண்டுமாய் கேட்கிறேன். என்னுடைய விசுவாசமானது பலவீனமாக இருக்குமானால் என்னுடைய விசுவாசத்தை, பலப்படுத்தும், அவிசுவாசத்திற்காக எனக்கு உதவி செய்யும் தேவனே, அது அவளிடமும் இருக்குமானால் அப்படியே செய்வீராக, பிதாவே அந்தப் பார்வையை அவளுடைய கண்களுக்கு திரும்பவும் கொண்டு வருவதாக. சாத்தானே, உன்னுடைய குருட்டுத்தனமான ஆவியானது தேவ குமாரானாகிய இயேசுவின் நாமத்தினால் இந்த ஸ்திரீயை விட்டு அகன்று போ. சகோதரியே இப்பொழுது அது உங்களை விட்டு போய்விட்டது. உங்கள் கண் கண்ணாடி களை கொடுங்கள். அவள் பார்த்து கொண்டு இருக்கிறாள். சந்தேகம் கொள்ளாதீர்கள் பாருங்கள் எல்லாம் சரியே-? எத்தனை விரல்கள் என்னிடம் இருக்கிறது-? இப்பொழுது எத்தனை இருக்கிறது-? ஒன்றா-? உங்கள் கண்ணாடி உங்கள் கையில் இருக்கிறது. உங்களுடைய கண்புரை நோய் மரித்துப் போய் விட்டது. நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். சகோதரியே இப்பொழுது மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருங்கள் இன்னும் சில நாட்களில், ஒரு நாளின் காலைப் பொழுதில் அருமையாக பார்த்துக் கொண்டிருப்பீர்கள், அது உண்மையாக நன்றாக இருக்கும். அது இன்னுமாக வலுப்பெறும். 72-மணி நேரம் வரை ஏறக்குறைய பார்வையில்லாமல் சென்று கொண்டிருப்பீர்கள் அப்படி நீங்கள் இருக்கும்போது அந்த கண்புரை வீக்கமாக இருந்து கொண்டிருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து அந்த சரீரமானது உடைந்து அதன் ஜீவனானது அதை விட்டு போய் விட்டிருக்கும். தொடர்ந்து தேவனை துதித்துக் கொண்டிருங்கள், தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள் பாருங்கள்-? நீங்கள் சந்தேகம் கொள்வீர்களென்றால் அது அப்பொழுது மீண்டும் திரும்பி வந்துவிடும் ஆகவே தேவனை விசுவாசித்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் சென்று கொண்டு இருங்கள். சில நாட்களுக்குப்பிறகு அது முற்றிலும் சுத்தமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள், அது அத்துடன் முடிந்துவிட்டது. இப்பொழுது மரித்துப் போய்விட்டது 21. சரி, மேலே வாருங்கள் சகோதரியே, ஓ, நான் மிகவும் உணர்ச்சிவயப்படவில்லை என்று உணர்கிறேன் - இருக்கலாம், ஆனால் நான் உண்மையில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். "தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்" என்று சொல்ல வேண்டும் போல் உணர்கிறேன். எல்லாம் சரி, சகோதரியே, ஒரு நிமிடம் உங்கள் கையை கொடுங்கள், சகோதரியே இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து சென்று கொண்டு இருக்கிறீர்களா-? உங்கள் வலதுபக்கம்.... காரணம் உங்களுக்கு புற்றுநோய் இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் கடைசி வரை இதே நிலையில் நீண்ட காலம் நீடிக்க முடியாது அது உங்களைக் கொன்றுவிடும் உங்களிடம் கூட அது சொல்லப்பட்டிருக்கிறது இல்லையா-? எல்லாம் சரி உங்கள் முழு இருதயத்துடன் இப்பொழுது விசுவாசியுங்கள். எங்கள் பரலோக பிதாவே இப்பொழுதும் அந்த கலக்கப்பட்ட தண்ணீர் மீது நீர் இங்கே இருந்து கொண்டிருக்கிறீர். கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்த அந்த ஆவியானது அந்த வழியாக பிரித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரி ஆனவள் இங்கே நின்று கொண்டிருக்கிறாள். பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வெளிச்சத்திற்குள்ளாக அவளை கொண்டு வந்ததற்காகவும் இன்றிரவு நீர் இங்கே இருப்பதற்காகவும் நாங்கள் மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கிறோம். தேவனே உம்முடைய இரக்கம் இருக்கட்டும் என்று என்னுடைய முழு இருதயத்தோடு நான் உம்மிடம் கேட்கிறேன். புற்று நோயாகிய பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஸ்திரீயை விட்டு அகன்று போ. அது போய்விட்டது ஆமென், தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து உன்னை நன்றாக குணமாக்குகிறார் மகிழ்ச்சியுடன் உன்னுடைய பாதையில் நீ போகலாம். நாம் "தேவனுக்கு துதிகளை ஏறெடுப்போம்" சரி பெண்மணி இப்பொழுது மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருப்பாயாக. அவருடைய பரிசுத்த நாமத்தை துதிப்பாயாக எல்லாம் சரி. 22. சிறிய இனிமையான சிறுமியே நீ எப்படி இருக்கிறாய்-? இங்கே வா நான் பார்க்கட்டும் என்னே ஒரு அன்பான சிறிய பெண் எவ்வளவு இனிமை எனக்கும் உன்னைப் போலவே ஒரு சிறிய சிறுமி உண்டு அவள் இப்போது இங்கே வந்திருக்கிறாள் என்று நான் நினைக்கவில்லை நான் உன்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே பேச முடியுமா-? இப்பொழுது இனிய இதயமே இங்கே கவனி. அம்மா, இப்பொழுது நீங்கள் முதலாவது இந்த வழியை கவனியுங்கள் இந்த குழந்தை, நிச்சயமாகவே அங்கே ஏதோ சில காரியங்கள் உங்கள் குழந்தையோடு தவறாக இருந்து கொண்டிருக்கிறது. அப்படி இல்லை என்றால் அதை இங்கே கொண்டு வந்து வைத்திருக்க மாட்டீர்கள். இந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த குழந்தையின் நிலை என்ன என்று நான் உன்னிடம் கூற முடியும் என்று உன் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறாயா-? சகோதரியே உன் உள்ளத்தில் கூட ஒரு நீண்ட காலமாக ஏக்கம் இருந்து கொண்டிருக்கிறது நான் என்ன கூறிக்கெண்டு இருக்கிறேன் என்று உனக்கு தெரிகிறதா-? இந்தக் குழந்தை தவறாக ஏதோ சில காரியங்களை பெற்றுக்கொண்டதாக இருக்கிறது. அது என்ன என்று என்னாலும் கூட சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. மூக்கு மற்றும் காதுகளில் அது ஒடிக்கொண்டிருக்கிறது சரிதானே-? தேனே, இந்த வழியை கவனியுங்கள் இந்த குழந்தை மெலிந்த தேகம் கொண்ட உயரமான ஒரு சிறப்பு மருத்துவரால்(Doctored) பரிசோதிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அவர் ஏதோ ஒன்றை கொடுத்தார். ஆகவே நீ அதை கொண்டு வந்திருக்கிறாய். நீ இந்த குழந்தையை எடுத்துக் கொண்டு இல்லை குழந்தைக்கு கொடுக்கும் படியாக அவர் கொடுத்ததை அதன் மூக்கிலும், காதிலும் வைத்த போது அது ஆரம்பித்தது அது சரியா-? ஆமாம், அம்மா அது உண்மைதானே-? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் இந்த குழந்தை நன்றாக இருப்பதற்கும், ஆசீர்வதிக்கும்படியாகவும் நான் ஜெபித்தால் நீ உன்னுடைய பொருத்தனைகளை தேவனுக்கு செலுத்த வேண்டும். எங்கள் பரலோக பிதாவே, தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கும் படியாக இந்த அருமையான குழந்தையை இந்த இரவில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். சாதாரண மற்ற குழந்தையைப் போல அது வாழட்டும், ஆகவே அது அப்பால் செல்லட்டும் மேலும் அந்த தாயானவள், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய இருதயத்தின் விருப்பப்படி ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளட்டும். சகோதரியே இப்பொழுது உன்னுடைய குழந்தையை எடுத்துக் கொள், அது எல்லாம் சரியாகிவிட்டது, நன்றாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரு அருமையான சிறிய நல்ல பெண்ணாக சாதாரணமாக வாழட்டும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. நீ இயேசுவை நேசிக்கிறாயா -? நாம் "தேவனுக்கு துதி செலுத்துவோமாக" சபையார் "தேவனுக்கு மகிமை" என்று கூறுகின்றனர். 23. சகோதரியே எப்படி இருக்கறீர்கள் நல்லது. உங்கள் கையை பார்க்கட்டும். நான் எதிர்பார்த்ததைவிட ஒரு பெரிதான ஒரு நம்பிக்கை உங்களிடம் இருக்கிறது. மேலே நடந்து வந்தபோது உங்கள் குரல்வளை சுரப்பியில் (Thorat glands) வீக்கம் இருந்தது. ஆனால் அது இப்பொழுது போய்விட்டது. நீங்கள் மேலே வந்து கொண்டு இருந்தபோது தேவன் அதை சுகப்படுத்திவிட்டார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அது உங்களைவிட்டு போய் விட்டது. சந்தோஷமாக துதிகளை பாடிக்கொண்டு சென்று கொண்டிருங்கள் "தேவனுக்கு துதி உண்டாகட்டும் என்று சொல்வோமாக, அப்போது தான் அது விசுவாசமாக இருக்க முடியும். நண்பர்களே இங்கே உங்களுக்கு புரியாமல் இருந்திருக்க கூடும். உற்சாகம் இல்லாமல் இருக்கும் ஜனங்களுக்கு சர்வவல்லவரின் பிரசன்னத்தைக் காணும்படியாக ஒரு வேளை ஏதோ ஒரு காரியம் உற்சாகத்தை ஏற்படுத்தலாம் அவர்களுடைய ஆத்துமாக்கள் ஆசீர்வதிக்கப்படட்டுக் கொண்டிருக்கிறது. 24. சரி, பெண்ணே நீங்கள் எனக்கு முன்னால் வாருங்கள் நல்லது. அங்கே இரண்டு காரியங்கள் உங்களுடன் தவறாக இருந்து கெண்டிருக்கிறது. அதில் முதலாவதாக ஒன்று பெண்களுக்கு உரிய தொல்லையாக இருந்து கொண்டிருக்கிறது. மற்ற ஒன்று அவள் மிகவும் பதட்டமாக நரம்பு தளர்ச்சியுடன் (Nervous) இருந்து கொண்டிருக்கிறாள், நீங்கள் சில நேரங்களில் பதட்டத்துடன் இருக்கிறீர்கள் உங்களுடைய மற்றொரு தொல்லை சுரப்பிகளில் இருந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லை. சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஆம் நான் வேறு ஒன்றையும் பார்க்கிறேன். உங்கள் முதுகிலும் கூட ஒரு தொல்லை இருந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய முதுகுதண்டில் இல்லையா-? அது சரிதானே-? இப்பொழுது அதை உன் முழு இருதயத்துடனும் அதை விசுவாசிக்கிறாயா-? உன்னை குணமாக்க நான் இயேசுவிடம் கேட்பேன் என்றால் அதை நீ உன் உணர்வுகள் மற்றும் உன்னை குறித்த உன்னிடம் கூறிக்கெண்டிருக்கிற காரியங்கள் பற்றி என்ன என்று உனக்கே கூட தெரியவில்லை, மேலும் அது என்னவாக இருக்கிறது என்பதை சரியாக நீ பார்க்கிறாய். சகோதரியே இப்பொழுது அது உன்னுடைய விசுவாசம் மற்றும் அதனுடைய அளவாக இருக்கிறது. விசுவாசிக்க மாத்திரம் செய், தேவன் எல்லாற்றையும் பரிபூரணமாக்குவார். உன்னை ஆசீர்வதிக்குமாறு தேவனிடம் நான் கேட்டால் அவர் என்னுடைய ஜெபத்தை கேட்பார் என்று நீ விசுவாசிப்பாயா-? மேரி அல்லது மார்த்தாள் அவர்களுடைய சகோதரன் மரித்துப் போன போது என்ன கூறினாள் என்று ஞாபாகம் இருக்கிறதா-? ''என்னுடைய சகோதரன் மரித்துப் போய்விட்டார். இருப்பினும் தேவனிடம் நீர் கேட்டுக் கொள்வது எதுவோ அதை தேவன் உமக்கு தந்தருள்வார்'' பார்த்தாயா நீயும் அந்த வழியில் அதை விசுவாசிப்பாயா-? தலையை தாழ்த்தி உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள். எங்கள் பரலோகப் பிதாவே "பூமியிலே நீங்கள் எதை கட்டுவீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூமியிலே எதை நீங்கள் கட்டவிழ்ப்பிர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கபட்டிருக்கும்'' தேவனே அது உம்முடைய வார்தையாக இருக்கிறது. பூமியிலே எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அது அவர்களுக்கு மன்னிக்கப் பட்டிருக்கும், எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அது அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும்" என்று அதை நீர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். ஆகவே இப்பொழுது உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவளுடைய தொல்லைகளில் இருந்து கட்டவிழ்த்து அவளை ஆசீர்வதிக்கும்படியாக இந்த சகோதரியின் மீது என்னுடைய கரங்களை வைக்கிறேன். மேலும் அவளுடைய தொல்லைகளில் இருந்து கட்டவிழ்க்கும் படியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த பெண்ணை விட்டு அகன்று செல்லட்டும். சரி, சகோதரியே நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள் இப்பொழுது நீங்கள் பின்னால் திரும்பியவாறு இந்த வழியாக நகர்ந்து செல்லுங்கள் நல்லது நீங்கள் சரியாகிவிட்டீர்கள் இப்பொழுது நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். நன்றாக இருப்பதாக உணருகிறீர்கள் அல்லவா-? அப்படியே உங்கள் வழியில் செல்லுங்கள் நல்லது, அருமை தேவனை துதித்துக் கொண்டே செல்லுங்கள். 25. ஒவ்வொருவரும் "தேவனுக்கு துதியை செலுத்துவோம் என்று கூறுவோமாக தேவன் ஆவியாகவும் தொழுகைக்குரிய ஒன்றாகவும் இருந்து கொண்டிருக்கிறார். "அவர்கள் அவரை தொழுது கொண்டார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. சகோதரியே, இப்பொழுது ஒரு கனம் இந்த ஒரு வழியில் கவனியுங்கள், இப்பொழுது தான் அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள் எப்படி உணருகிறீர்கள்-? ஆச்சரியமாக இருக்கிறது. அது நன்றாக இருக்கிறது. கிறிஸ்துவே அந்த சத்தியமாக இருக்கிறார். இப்பொழுதே தேவனே என் மேல் இரக்கம் வைத்து சரியாக என் அவிசுவாசத்தை நீங்கும்படியாக எனக்கு உதவி செய்வீராக இப்பொழுதே குணமாக்கப்படுவதாக சரி, சகோதரியே நீங்களும் கூட கடந்து செல்லுங்கள். அங்கே நீங்கள் நின்று கொண்டிருந்த பொழுதே அந்த இருதய தொல்லையானது உங்களை விட்டுச் சென்று விட்டது. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரியே நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்த போதே தேவன் உங்களை ஆசீர்வதித்து விட்டார். "தேவனுக்கே துதிகளை செலுத்துவோம் என்று கூறுவோமாக" அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது. தேவன் வெறுமனே சரியாக யாரை வேண்டுமானாலும் இங்கே எடுத்து அதே நேரத்தில் இருதயத்தில் தொல்லை உடையவர்களை சரியாக்கி விட்டு அல்லது சுகப்படுத்திவிட்டு அவர்களிடம் இருந்து வேறு எங்கோ கடந்து சென்று விடுகிறார். அது உன்னதமாக இருப்பதாக உணர முடிகிறது. என்னுடைய சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அது அங்கே எங்கேயோ இடது புறம் போய் விட்டது. சரி எல்லோரும் விசுவாசத்துடன் இருங்கள். 26 சரி, மேலே வாருங்கள் சகோதரியே, உன்னுடைய கண்களுக்காக நீ உன் முழு இருதயத்தடன் விசுவாசிக்கிறாய் அல்லவா-? இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்தில் உன் கண்ணாடிகளை அகற்றி விட்டு முழு இருதயத்துடனும் விசுவாசித்துகொண்டு மேடையை விட்டு சென்று கொண்டிரு. "தேவனுக்கே துதி உண்டாகட்டும்" என்று கூறுவோம். தலைகளை தாழ்த்தி துதிகளை ஏறெடுப்போம். எங்கள் பரலோகப்பிதாவே, உம்முடைய குமாரானாகிய இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றி கூறுகிறோம், பார்வையை திரும்பவும் அளிப்பதற்கும், முடவர் நடப்பதற்கும், குருடர் பார்க்கும் படியாகவும், செவிடர் கேட்கும்படி செய்யவும் அவரால் மட்டுமே முடியும். வளர்ந்த புற்றுநோய் கட்டியையும் அவரால் அகற்ற முடியும். ஓ.... வானங்களையும், பூமியையும் ஒன்றுமில்லாதவைகளில் இருந்து உண்டாக்கிய தேவனாக நீர் இருக்கிறீர், ஆகவே அவைகள் இப்பொழுது காணும்படியாக இருந்து கொண்டிருக்கின்றன. உம்முடைய ஆசீர்வாதங்களுக்காகவும், இரக்கத்திற்ககாவும் எங்கள் முழு இருதயத்தோடும் தாழ்மையுடனும் உம்மை தொழுதுகொள்ளச் செய்யும் உமக்கு நன்றி பிதாவே, தேவ குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம் ஆமென் சரி ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்தடனும் விசுவாசித்துக்கொண்டிருங்கள். 27. தாயுடன் அந்த சிறுபையன் இங்கே இருந்து கொண்டிருக்கின்றான் அவனை குறித்து ஒரு தரிசனம் விரைவாக வந்து கொண்டு இருக்கிறதாக உணர்கிறேன். உங்களிடம் அட்டை வைத்திருக்கறீர்களா-? நல்லது ஜெபவரிசையில் இருக்கும் போது நீங்கள் அழைக்கப் படுவீர்கள் உங்கள் விசுவாசம் கிரியை செய்யுவதற்காக உங்களிடம் சில காரியங்களை கேட்டுக் கொள்ளப்போகிறேன். நீங்கள் என்னை நம்பாமல் உங்கள் அட்டையை கீழே எறிந்து விடுவீர்களா-? நீங்கள் செய்வீர்களா-? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்-? சரி. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அந்தக் குழந்தையின் நீர் கோவை வியாதியை தேவன் குணப்படுத்தும்படி தேவனிடம் கேட்டுக் கொள்வதற்கு இங்கே நின்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது பாருங்கள் இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூற விரும்புகிறேன் உங்கள் கரத்தை இந்த குழந்தையின் தலைமீது வையுங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, விசுவாசத்தின் மூலம் இந்த அற்புதங்களை நீர் செய்திருக்கிறீர் இப்பொழுதும் கூட நீர் இந்த குழந்தையை குணப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தேவகுமாரானாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இப்பொழுதே அது போகட்டும் ஆமென். சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இங்கே அருகில் வசிப்பதாக கூறினீர்கள் அல்லவா-? இன்றிரவு ஆராதனையிலிருந்து செல்லும் போது ஒரு லேசான நூலை எடுத்து அதை அந்த குழந்தையின் தலையை சுற்றிலும் இப்படியாக கட்டுங்கள், மீதியை வெட்டி எடுத்து விடுங்கள் மூன்று இரவுகள் காத்திருங்கள் பிறகு மீண்டுமாக அந்த அந்த சிறிய நூலை சுற்றிலுமாக கட்டுங்கள் பிறகு அதை வெட்டி எடுத்து இடைப்பட்ட அந்த நேரத்தில் தலையானது எவ்வளவு சுருங்கி இருக்கிறது என்று பாருங்கள். மேலும் அதை இங்கே மேடைக்கு கொண்டு வாருங்கள் சாட்சிக்காக அதைச் செய்வீர்களா-? எத்தனை பேர் அந்த சிறிய நூலைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்-? வெளியில் இருந்து கொண்டிருக்கும் ஜனங்களாகிய உங்களுக்கு மட்டுமே அது இருந்து கொண்டிருக்கிறது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்து பாருங்கள், மேலும் தேவனுடைய மகிமையைக் நீங்கள் காண்பீர்கள். 28. சரி, அடுத்த நபர் எங்கே இருக்கிறார்-? கொஞ்சம் முன்னால் வாருங்கள் சகோதரியே. ஒ.... சரி அவளை இங்கே மேலே கொண்டு வாருங்கள். மாலை வணக்கம். சகோதரியே, இரண்டு அல்லது மூன்று காரியங்கள் உங்களிடம் தவறாக இருந்து கொண்டிருக்கிறது. கவனியுங்கள், நீங்கள் மருத்துவர்களை நம்புகிறீர்களா-? மேலும் நீங்கள் தேவனிடம் கேட்பீர்களென்றால் அவர் உங்கள் தளர்ந்த கை, வலதுகைக்கு விடுதலை தருவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? அது சரி தானே-? சில நேரங்களில் நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முதுகில் ஏதோ ஒரு காரியம் தவறாக இருக்கிறது. உங்கள் முதுகில், முதுகு வலியுடன், மற்றும் காய்ச்சல் இப்படிப்பட்ட மற்ற காரியங்களுக்காக அங்கே அந்த அறையில் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது அது உண்மைதானே-? சரியாக அங்கே இருந்தீர்கள் அல்லவா-? சில வாரங்களுக்கு முன்பு அதற்காக ஜெபம் செய்து கொண்டிருந்தீர்கள். என்ன செய்து கொண்டிருந்தீர்கள்-? என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்-? என்பது உண்மையா-? பார்வையாளர்கள் அது உண்மை என்று விசுவாசிக்கும்படியாக உங்கள் கரத்தை இப்படியாக மேலே உயர்த்துங்கள். சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் என்ன செய்தீர்கள்-? நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு இருந்தீர்கள்-? மேலும் நீங்கள் எங்கே இருந்தீர்கள்-? உங்களுடன் வித்தியாசமான நான்கு காரிங்கள் தவறாக இருந்து கொண்டிருக்கிறது அது சரி தானே-? தேவனுடைய ஆவியானவரால் உன்னுடைய இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு அது இப்பொழுது உன் மேல் இருந்து கொண்டு இருக்கிறது. நாத்தான்வேலிடம் நீ "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன் அந்த மரத்தின் கீழே நான் உன்னை பார்த்தேன்" என்று கூறினார். இயேசு கூறியதை போல அதே ஆவி இருந்து கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்கிறாயா-? மேலும் உன்னுடைய படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டு தேவனிடம் நீ என்ன கேட்டுக்கொண்டு இருந்தாய் என்பதை பார்த்தேன். நீ தேவனிடம் என்ன கேட்டாய் என்று தேவன் மற்றும் உன்னை தவிர இந்த உலகத்தில் வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. அது சரி தானே-? ஆகவே அதே ஆவியுடன் சில வாரங்களுக்கு முன்பு நீ செய்த ஜெபத்தை வெளிப்படுத்தும் படியாக நான் இங்கு வருகிறேன் அது உண்மைதானே-? இங்கே எல்லாக் காரியங்களையும் கர்த்தருடைய ஆவியானவர் அறிந்தவராக இருந்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா-? நீங்கள் ஏற்கனவே சுகமாக்கப்பட்டு விட்டீர்கள் நல்லது, சகோதரியே, ஜெபமானது ஒரு ஒழுங்கில் இருக்க கேட்டுக் கொள்ளப் போகிறேன் தேவன் மிகவும் நன்றாக உங்களை சுகப்படுத்தி விட்டார். அது உங்களுக்கு தெரியும். நான் உங்களிடம் பேசிக் கொண்டிந்த போது அதை உணர்ந்திருப்பீர்கள் அது சரியா-? ஆகவே நான் உங்களிடம் உங்கள் ஜெபத்தை பற்றி துவங்கும் போது பார்வையாளர்களும் அதை அறிந்து கொள்வார்கள். ஜெபத்தில் நீங்கள் கூறின அந்த காரியங்கள் ஒரு ஆச்சரியமான குளிர்ந்த உணர்வை கொண்டு வந்தது அது உண்மையானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அப்பொழுதே நீ குணமாக்கப்பட்டிருந்தாய், உன்னுடைய முதுகு தண்டு தொல்லை போய்விட்டது, மற்றும் உள்ள எல்லா தொல்லைகளும் போய்விட்டது. உன்னுடைய விசுவாசமானது உனக்குள்ளாக மேலும் கீழுமாக ...நகர்ந்து கொண்டிருந்தது. எல்லாம் சரி, இப்பொழுது இப்படி கரங்களை உயர்த்தி தேவனே உமக்கு நன்றி" என்று சொல் ஆமென் மகிழ்ச்சியுடன் மேடையை விட்டு போய்க் கொண்டிரு. 29. எனக்கு அன்பான நண்பர்களே "தேவனுக்கு துதி உண்டாவதாக" என்று நாம் கூறுவோமாக. இந்த உலகில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய எந்த ஒன்றும் இல்லை என்பதை இந்த ஸ்திரீயானவள் அறிவாள். சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு அவள் தேவனுக்கு முன்பு ஜெபம் செய்து கொண்டிருந்ததை யாரும் அறிந்திருக்க முடியாது. அந்த வழியில், அந்த நிலையில், அந்த அறையில் காரியங்கள் இருந்தன. மேலும் அவள் தேவனிடம் கூறின வார்த்தைக்கு வார்த்தை எப்படி சரியாக காணப்பட்டது. தேவன் ஜெபங்களை ஜெபங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் வெளிப்படுத்த முடியும். இப்பொழுது நான் அல்ல நண்பர்களே இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இந்த கட்டிடத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறார். ''நீ அத்திமரத்தின் கீழ் ஜெபித்துக் கொண்டிருந்தாய்" என்று அவன் இங்கே வருவதற்கு முன்பாகவே கூற முடிந்தது. ஆகவே பிலிப்புக்கு அவர் என்ன செய்தாரோ அதைவிட அதிகமாக அது இன்றிரவு வெளிப்படையாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த காரியங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறது. 'நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், இதைவிட அதிக கிரியைகளை செய்வீர்கள்" அது சரிதானே -? கிறிஸ்தவ நண்பர்களே, நீங்கள் எப்படி சந்தேகம் கொள்ள முடியும்-? எப்படி உங்களால் முடியும்-? இந்த கட்டிடத்திற்குள் நிச்சயமாக எந்த ஒரு சந்தேகமும் இருக்க முடியாது. சகோதரனே, சகோதரியே என்னை நோக்க வேண்டாம், என்னால் அப்படிச் செய்ய முடியாது, எப்படி நான் அறிந்து கொண்டிருக்க முடியும், ஒரு பள்ளிப்படிப்பின் இலக்கணம் கூட அறியாத நான் ஒரு ஏழை மனிதனாக இருக்கிறேன். நான் ஓ.... நான் உங்களுக்கு அதை எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் இங்கே இருந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள், அவர்களில் சிலர் கிறிஸ்துவாக இவர் இங்கே இருந்த போது "இப்பொழுது நல்லது நாங்கள் அப்பொழுது அந்த நாட்களில் இருந்திருந்தால் நாங்கள் விசுவாசித்திருப்போம்" என்று கூறலாம். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் எப்பொழுது விசுவாசிக்க முடியும். இயேசு ஒரு போதும் ஜெபவரிசை அழைப்பை செய்யவில்லை, அவர்கள் ஒவ்வொவருடைய இருதயங்களில் இருந்த இரகசியங்களை சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஜனங்களிடம் எப்போதாவது ஒரு முறை தான் அந்த வார்த்தையை அவர் பேசினார். எல்லா நேரங்களிலும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கவில்லை. மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே என்று வேதாமத்தில் இருக்கிறது. இதைவிட பெரிய காரியங்களை நீங்கள் செய்வீர்கள் என்று கூறினார் அது சரிதானே-? நிச்சயமாகவே அவர் தேவனாக இருந்து கொண்டு இருக்கிறார். 30. சரி சகோதரியே, இந்த ஒரு வழியை பாருங்கள் சிலர் என்னைக் குறித்து இப்படியாக நினைத்திருக்க வேண்டும். நல்லது, எனக்கு தெரியாது. உங்களில் சிலர் அவர் ஜனங்களின் மனதை அறிந்து கொள்கிற (Mind Reade) ஒருவராக இருந்து கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா -? நல்லது இங்கே கவனியுங்கள் இந்த ஸ்திரீக்கு பின்புறமாக நான் நின்று கொண்டிருக்கிறேன். சகோதரியே இப்பொழுது நீங்கள் அங்கே ஒருவருக்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் அது ஒரு குழந்தையாக இருக்கிறது. நான் சொல்வதை கேட்கிறீர்கள் என்றால் "ஆமென்" என்று கூறுங்கள். அதாவது அந்த ஸ்திரீ இங்கே இருக்கிறாள் "ஆமென்" என்று கூறுங்கள். உன்னைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது இப்பொழுது தான் மேலே வந்து இங்கு அமர்ந்திருக்கிறாய் அது சரி தானே-? உன்னுடன் உள்ள கோளாறு என்னவென்றும் நீ எதற்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு வந்திருக்கிறாய் என்றும் கூற முடியும் என்றால் என்னை விசுவாசிப்பாயா-? ஆண்டவர் அங்கே நின்று கொண்டிருந்த போது பரிசேயர்கள் அவரை சுற்றிலும் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுடைய எண்ணங்களை அறிந்து அவர் அவர் கூறிக்கொண்டு இருந்தார். அதே காரணத்தினால் தான் நான் இன்றிரவும் அந்த வழியில் பேசிக் கொண்டிருக்கிறேன். இங்கே ஜனங்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் நினைவுகளையும் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். எல்லாம் சரி, சகோதரியே உனக்கு இருந்த நரம்பு தளர்ச்சி, உன்னை விட்டு போய்விட்டது நீ சுகமாகிவிட்டாய். அதை நீ விசுவாசிக்கிறாயா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் மகிழ்ச்சியுடன் உன்னுடைய பாதையில் நீ போகலாம். எந்த ஒன்றும் உன்னை தொந்தரவு செய்யாது. 31. நாம் "தேவனுக்கு துதி செலுத்துவோம்" இந்த கட்டிடத்திற்குள் என்ன இருந்து கொண்டிருக்கிறது என்பதை சரியாக தேவன் அறிந்திருக்கிறார். அது தேவன் என்பதை தவிர வேறு ஒரு காரியமும் இல்லை. உங்கள் மனதில் உள்ள நினைவுகளை அவர் நன்றாகவே அறிந்தவராக இருக்கிறார். மேலும் அவர் தம்முடைய இரகசியங்களை தம் ஊழியக்காரர்களுக்கு தெரியப்படுத்துவார். அது சரி தானே-? நிச்சயமாகவே. ஒவ்வொருவரும் விசுவாசம், நம்பிக்கையை உடையவர்களாக இருங்கள் கர்த்தருடைய ஜனங்கள் கூடியிருக்கும் எந்த இடத்திலும் எதுவும் நிகழலாம் நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது-? நன்றாக உள்ளது சரி நாம் கடந்து செல்வதற்கு ஒரு சிறிது நேரமே இருக்கிறது. கர்த்தர் நம்முடைய சகோதரனை ஆசீர்வதிப்பார். வியாதிகள், மற்றும் நிறைய காரியங்களுடன் நீங்கள் வேதனைப்பட்டுக்கெண்டு அங்கு நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அது சரி தானே-? மற்றொரு காரியம் உங்கள் இதயம் மோசமாக இருக்கிறது அது சரி தானே-? சொல்லுங்கள் சகோதரனே நான் இப்பொழுது சில காரியங்களை பார்க்கிறேன். இப்பொழுது பாருங்கள் இங்கே அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் இதயத்தில் ஆழமான சில காரியங்களுக்காக விருப்பங்களை உடையவராக இருக்கிறீர்கள் அது சரி தானே-? மேலும் அது விருப்பமானது உங்கள் குடும்ப விவகாரம் சம்பந்தப்பட்ட சில காரியங்களைாக இருக்கிறது. அது உண்மை தானே-? நல்லது, என் அருமை சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், வீட்டுக்கு செல்லுங்கள், மேலும் தேவன் ஒரு சில அருமையான பையன்களை உங்களுக்கு தருவாராக இந்த உலகத்தில் நீங்கள் கடினமாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்க முடியாது. என் அருமை சகோதரரே தேவன் ஆசீர்வாதங்களை தருவாராக... ஆசீர்வதிப்பாராக. குமாரனாகிய இயேசு 'ஜீவனுள்ள தேவனுடைய கிறிஸ்துவிற்கு நாம் துதி செலுத்துவோமாக” அவர் இன்றிரவு இங்கே இருந்து கொண்டு எல்லா காரியங்களையும் அறிந்தவராக இருக்கிறார் என்பதை தவிர வேறு எந்த ஒன்றும் இங்கே இருந்து கொண்டிருக்கவில்லை. 32. சரி சகோதரியே தேவன் அறிவார் உன்னுடைய முதுகில் உள்ள தொல்லைகள் கூட முழுவதும் போய்விட்டது மேலே செல். அந்த சிறுநீரகத் தொல்லை, பெண்களுக்குரிய பிரச்சனை எல்லாம் போய் விட்டது நீ விரும்பியபடி அந்த வல்லமையுடன் தேவனுக்கு சேவை செய் அது சரி இப்பொழுதே நீ சென்று அவருக்கு உன் ஜீவியத்தை கொடுப்பாயா-? எல்லாம் போய் விட்டது நீ சரியாக இருக்கிறாய் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் சரி அது எல்லாமே போய் விட்டது. அவள் மற்ற தொல்லைகளையும் உடையவராக இருக்கிறாள் தேவனுக்கு சேவை செய்ய அவள் விரும்புகிறாள். அப்படிப்பட்ட விதமாகவே ஊழியக்காரர்கள் ஜனங்களிடம் பேச வேண்டும். ஆகவே அவர்கள் தேவனுடன் சரியான விதத்தில் இருக்க வேண்டும் அதை விசுவாசியுங்கள் அதுவே பிரதானமான காரியமாக உள்ளது. தேவனுடன் சரியாக இருப்பதற்கு அதை நீங்கள் விசுவாசிக்கீறீர்களா-? சரி இப்பொழுது ஒவ்வொருவரும் மிகவும் பயபக்தியுடன் இருங்கள். 33. ஒரு கனம். சகோதரியே, உன்னுடைய சிறிய பையனுக்காக அவன் தலையில் உள்ள நீர்க்கோவை வியாதிக்காக நான் ஆசீர்வாதங்களை கேட்டபொழுது என்ன நினைத்தாய்-? அந்த நேரத்தில் குறைந்தது ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் குறைந்து விடும் என்று விசுவாசிக்கவில்லையா-? அந்த சிறிய நூல்கயிறை இங்கே மேலே கொண்டு வர விரும்புகிறேன். "அந்த நேரத்தில் அது எவ்வளவு சுருங்கியது" என்பதை கூறலாம். நாம் அதைவிட விரைவாக செய்வோம். நாளை இரவு அதை மீண்டுமாக கொண்டு வாருங்கள் சரி இந்த மனிதர்கள் அதைக் காணும் படியாக அதை நாளை இரவு திரும்பவும் கொண்டு வாருங்கள் இப்பொழுது அது சுருங்கிப் போய் கொண்டிருக்கிறது. அந்த சிறிய தலையின் மேல் வைத்து அதை வெட்டி எடுங்கள் நீங்கள் அதைச் செய்யும் போது அது சுருங்குவதை காண்கிறீர்கள், அது உங்கள் விசுவாசத்தை கூட்டுவதாக இருந்து, ஒ அது இப்பொழுது மேலே போய் கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும் என்று கூறச் செய்யும் சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சரி எல்லாம் சரி, அம்மா உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசித்து இந்த வழியாக நடந்து வாருங்கள் நீங்கள் விசுவாசிக்கிறாயா-? என்னை தேவனுடைய தீர்க்கத்திரிசி என்று ஒத்துக் கொள்கிறீர்களா-? உன்னுடைய இருதயத்தில் இருந்த தொல்லைகள் உன்னை விட்டுப் போய்விட்டது. நீங்கள் மேடையை விட்டு செல்ல முடியும் சுகமாயிருங்கள் இப்பொழுது தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். அவள் நினைத்து கொண்டிருந்த சில விஷயங்களை நான் கேட்கவில்லை. அது தடையாக இருக்கலாம். அவர்களுக்கு ஒரு மட்டுமீறிய நரம்பு தளர்ச்சி மற்றும் மூட்டு வலியும் கூட உடையவளாக இருக்கிறாள், ஆகவே அது எல்லாமே அத்துடன் முடிந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆகவே மகிழ்ச்சியுன் அவள் போக முடியும். ஒ.. நான் அவர் அற்புதமானவர் அல்லவா-? ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு. மகிமை ஒ எப்படியாக அது இந்த கூடாரத்தின் மேலாக நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் அதை பார்க்கின்ற ஒவ்வொருவரும் அதைப் பெற்றுக்கொள்ளார்கள். விசுவாசத்தை உடையவர்களாக இருங்கள். 34. சகோதரியே, உங்கள் சுகமாக்குதலை நீங்கள் ஏற்றுக் கொண்ட போது, உங்களைச் சுற்றிலும் வெளிச்சம் இருப்பதை இன்னுமாக நான் காண்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறீர்கள். அது எல்லாம் முடிந்துவிட்டது. சரி சகோதரியே மேலும் உங்கள் நரம்பு தளர்ச்சியும் போய்விட்டது. நீங்கள் மகிழ்ச்சியுடன் மேடையைக் கடந்து செல்லமுடியும். ஐயா, நீங்களும் கூட குணமாகி விட்டீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். "தேவனுக்கு துதி உண்டாகட்டும் " என்று கூறுவோமாக அங்கே வெளியில் இருக்கும் சகோதரனே அவரை விசுவாசியுங்கள் நீங்கள் பயப்பட வேண்டாம், உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். உங்கள் நிலையை இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார். அங்கே அமர்ந்து நலமானதை அமைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பயப்படாதீர்கள் நீங்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். சில நிமிடங்களில் நீங்கள் அதை மேற்கொண்டு விடுவீர்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் அது அருமையாக இருக்கிறது. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசம் உடையவர்களாக இருங்கள் நிச்சயமாகவே அது உங்களை விட்டுச் சென்றுவிடும். 35. சரி, என்னிடம் வாருங்கள்... ஒ அருமையான அம்மாவே, பயப்படாதீர்கள், இங்கே இயேசு உங்களை சுகமாக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா-? எங்கள் பிதாவே, இப்பொழுதும் ஆசீர்வதியும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரியை விட்டு அகன்று போகும் படியாக இந்த பிசாசை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக மகிழ்ச்சியுடனும், சந்தோசத்துடனும் உங்கள் பாதையில் சென்று கொண்டிருங்கள். இங்குள்ள அனைவரையும் ஏன் குணப்படுத்த முடியாது-? மரித்துக் கொண்டிருக்கிற நிலையில் இங்கே எத்தனை பேர் இருந்து கொண்டிருக்கிறீர்கள் மற்றொரு கூட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். வாருங்கள் வந்து பக்கவாட்டில் நில்லுங்கள் உண்மையிலேயே மிகவும் அவசர நிலைமையில் உள்ளவர்கள் வரிசையில் வர முடியாதவர்கள் பீடத்தின் அருகே வாருங்கள் சிலரை இங்கே வரும்படியாக நாங்கள் செய்யப் போகிறோம் போதக சகோதரரே இங்கே வாருங்கள் ஒரு நிமிடம் இங்கே வந்து என் பக்கத்தில் நில்லுங்கள். ஒ.... நான்... எல்லோரையும் ஏன் தேவனால் சுகப்படுத்த முடியாது-? எல்லாம் சரி சகோதரியே உங்களிடம் இருக்கின்ற அந்த புற்றுநோயைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் வெறுமனே கொஞ்சம்... அது சரியாக இல்லையா-? புற்று நோய் உங்களை தொந்தரவு செய்கிறதா-? ஆனால் நீங்கள் மட்டும் விசுவாசம் கொள்வீர்கள் என்றால் தேவன் உங்களை சுகமாக்குவார் அது சரியா-? விசுவாசம் கொள்ளுங்கள், தேவன் உங்களை நன்றாக சுகமாக்குவார். 36. எல்லா ஊழியக்காரர்களையும் ஒன்றாக சேர்ந்து மேலே இங்கே சுற்றிலுமாக நிற்க விரும்புகிறேன். அங்கு சென்று பார்வையாளர்களோடு உங்கள் கரங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். பார்வையாளர்கள் அனைவரும் முடிந்த வரை சில நிமிடங்கள் பயபக்தியுடன் இருங்கள். சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் தொல்லைகள் என்ன என்பதை என்னால் கூறமுடியும் என்று நம்புகிறீர்களா-? சகோதரனே உங்களுடைய காசநோய் தொல்லை உங்களை விட்டு அகன்று விட்டது. உங்கள் முழு இருதயத்தோடு தேவனை விசுவாசியுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அனைத்து கிறிஸ்துவர்களே இப்பொழுது ஒரு நிமிடம் நாம் நம் தலைகளை தாழ்த்துவோமாக சில காரியங்களை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த கட்டிடத்திற்குள் சுகவீனமாக எத்தனை பேர் இருந்து கொண்டிருக்கிறீர்கள்-? நான் உங்கள் கரங்களை காணட்டும் இப்பொழுது முடிக்கும் தருவாயில் உண்மையில் கவனமாக கவனியுங்கள். பரிசுத்த ஆவியானது அபிஷேகித்து கொண்டிருக்கும் போது.... தேவைகள் உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கரங்கள் மேலே உயர்த்தப்பபட்டிருக்கும் போது ஒருவர் மற்றொருவர் மீது கைகளை வையுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார். *******